பேரிகை அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு


பேரிகை அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45) என்பவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பேரிகை சென்றார். அதேபோல் பாகலூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த சதீஷ் (25), பேரிகை அருகே குடிசாதனப்பள்ளியை சேர்ந்த தேஜஸ் (26) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பேரிகை வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் நாகராஜ் மற்றும் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேஜஸ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேஜசும் இறந்தார்.

1 More update

Next Story