மின்சாரம் தாக்கி 2 மயில்கள் செத்தன
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி ஊராட்சி கெங்குசெட்டிபட்டி, குண்டலஅள்ளி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் பைசுஅள்ளி ஏரிக்கரை ரோட்டில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் மயில் அமர்ந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் பெண் மயில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே செத்தது. ஆண் மயில் உடல் கருகி மின் கம்பத்தில் தொங்கியபடி இருந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின் கம்பத்தில் தொங்கியபடி கிடந்த ஆண் மயிலை அகற்றினர். தொடர்ந்து 2 மயில்களின் உடல்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி 2 மயில்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில பரப ஏற்படுத்தியது.