டிஐஜி தற்கொலை வழக்கு 2வது நாளாக விசாரணை..!
டிஐஜி தற்கொலை வழக்கில் 2வது நாளாக விசாரணை நடக்கிறது.
கோவை:
கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் ஜூலை 7ம் தேதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓ.சி.டி.எனப்படும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதுவே தற்கொலைக்குக் காரணம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மாறாக, சமூக வலைத்தளங்களில் பல விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதற்கு முடிவு கட்ட எண்ணிய போலீசார் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தவர்கள் உள்பட 8 பேருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.
இது தொடர்பாக நேற்று இருவரிடம் போலீஸ் உதவி ஆணையர் பாரி சங்கர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 2வது நாளாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தோரிடம் உதவி ஆணையர் பாரிசங்கர் விசாரணை நடத்துகிறார்.
Related Tags :
Next Story