தினத்தந்தி செய்தி எதிரொலி: கடலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்


தினத்தந்தி செய்தி எதிரொலி: கடலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கடலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் இருந்து மாணவர்கள் வந்த ஆட்டோ சமீபத்தில் விபத்துக்குள்ளானதில், ஒரு மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையொட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தி, கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி கூடுதல் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் பஸ் வசதி இல்லாமல் கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன்பிறகு வந்த அரசு பஸ்சில் முண்டியடித்தபடி ஏறிச்சென்றனர். இது பற்றி நேற்று தினத்தந்தியில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

கூடுதல் பஸ் இயக்கம்

இதை அறிந்த கடலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று பழைய கலெக்டர் அலுவலக சாலை வழியாக பெரியார் அரசு கல்லூரிக்கு கூடுதலாக பஸ்கள் செல்கிறாதா? என்று கண்காணித்தனர். அப்போது அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வந்தது. அதில் மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி கல்லூரிக்கு சென்றதோடு, மகிழ்ச்சியும் அடைந்தனர். பஸ்சில் ஏறாமல் நின்ற மாணவர்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏறிச்செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இது பற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், மாணவர்கள் நலன் கருதி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், தலைமை தபால் நிலையத்தில் இருந்தும் காலை 8 மணி முதல் 10 மணி வரை கல்லூரிக்கு தினந்தோறும் 26 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் சிரமம் இன்றி செல்ல வேண்டும். ஒரே பஸ்சில் கூட்டமாக ஏறி செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

---

Image1 File Name : M__SAHADEVAN_Staff_Reporter-20082341.jpg

----

Reporter : M. SAHADEVAN_Staff Reporter Location : Cuddalore - CUDDALORE


Next Story