தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் மின் விளக்குகள் தேவை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டீ.களத்தூர் கிராமத்தில் மின் விளக்குகள் போதிய வெளிச்சத்துடன் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், டீ.களத்தூர்
புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு செயல்படும் பன்மாடி கட்டிடத்தில் 3-வது தளத்தில் அரச மரக்கன்று வளர்ந்திருந்தது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் பாதிக்கப்படும் நிலையில் இருந்தது. வளரும் அந்த அரச மரக்கன்றை அகற்ற கோரி பொதுமக்களின் கோரிக்கையாக கடந்த 15-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் செய்தி-படத்துடன் வெளியிடப்பட்டது. இதனை கண்ட மருத்துவமனை அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் வளர்ந்து வரும் அரசு மரக்கன்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த மருத்துவமனை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினதந்தி நாளிதழின் புகார் பெட்டிக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்
பெரம்பலூரில் குடிநீர் பிரச்சினை
பெரம்பலூர் நகராட்சியில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்
விளம்பர பதாகைகளால் ஆபத்து
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நிற்கும் இடத்திலேயே தொடர்ச்சியாக விளம்பர பதாகைகளை வைக்கிறார்கள். தற்போது காற்றடி மழை காலம் என்பதால் இந்த பதாகைகள் பொதுமக்கள் மீது விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேப்பந்தட்டை.
எரியாத உயர் கோபுர மின்விளக்கு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில் பஸ் நிறுத்தத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.7 லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இருந்தது. அதில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் எரியாததால் இப்பகுதியில் இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்கள், குன்னம், பெரம்பலூர்