திண்டுக்கல்: செங்குறிச்சியில் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கழுகுமரம் ஏறும் விழா


திண்டுக்கல்: செங்குறிச்சியில் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கழுகுமரம் ஏறும் விழா
x

செங்குறிச்சியில் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கழுகுமரம் ஏறும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல்,

திண்டுக்கலை அடுத்த செங்குறிச்சி கிராமத்தில் பகவதியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கரையம்மன் ,மலையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 29 -ம்தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மன் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் கோவிலை வந்தடைதல், அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் ,கிடா வெட்டுதல் முதலிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான எண்ணெய் கழுகுமரம் ஏறும் விழா இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது. இதற்கென சுமார் 60 அடி உயர மரம் கொண்டு வரப்பட்டு அதன் பட்டைகள் உறிக்கப்பட்டு பின்னர் அதன்மீது வழுக்கும் தன்மையுள்ள விளக்கெண்ணெய், கேப்பை ஆகியவை தடவப்பட்டு கோவில் முன்பு உள்ள மந்தையில் ஊன்றப்பட்டது.

அதன் பிறகு அந்த மரத்தில் இளைஞர்கள் பொதுமக்களின் ஆரவாரம் முழங்க போட்டி போட்டு ஏறினர். இந்த கழுகுமரம் ஏறும் விழாவை காண ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தி ஆர்வத்துடன் வந்தனர்.


Next Story