இந்தோனேஷியாவுக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்


இந்தோனேஷியாவுக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்
x
தினத்தந்தி 1 Aug 2023 11:41 AM GMT (Updated: 1 Aug 2023 12:08 PM GMT)

சென்னையில் இருந்து இந்தோனேஷியாவுக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.

சென்னை,

இந்தியா-இந்தோனேஷியா இடையேயான நல்லுறவு சிறப்பாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இருந்து இந்தோனேஷியாவுக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. "பாடிக் ஏர் நிறுவனம்" தினசரி சேவை வழங்க உள்ளதால், பயணிகள் இனி மலேசியா, சிங்கப்பூர் சுற்றிச்செல்ல தேவையில்லை என்றும் வடக்கு சுமத்ராவின் குலானாமு நகரில் இருந்து இன்று மாலை புறப்படும் விமானம், இரவு 9.45 மணிக்கு சென்னை வந்தடைந்து மீண்டும் இரவு 11.10 மணிக்கு மறுமார்க்கமாக புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story