மாற்றுத்திறனாளி பெண் மகனுடன் தீக்குளிக்க முயற்சி


மாற்றுத்திறனாளி பெண் மகனுடன் தீக்குளிக்க முயற்சி
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் மகனுடன் தீக்குளிக்க முயன்றார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு அளிக்க வருபவர்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அப்போது நுழைவு வாயில் அருகில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது மகனுடன் வந்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தண்டராம்பட்டு எடத்தனூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்றும், அவரது கணவர் சென்னகிருஷ்ணன் குடும்பம் நடத்த சம்பள பணம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story