மறைந்து விட்ட மனிதநேயம்... விபத்தில் சிக்கிய வாலிபரிடம் செல்போனை திருடி சென்ற கொடூரன் - இரவு முழுவதும் மயங்கி கிடந்தவர் மூளைச்சாவு


மறைந்து விட்ட மனிதநேயம்... விபத்தில் சிக்கிய வாலிபரிடம் செல்போனை திருடி சென்ற கொடூரன் - இரவு முழுவதும் மயங்கி கிடந்தவர் மூளைச்சாவு
x

சென்னை, தாம்பரம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உதவாமல் அவரிடம் செல்பேனை திருடிய மனித நேயமற்ற கொடூரன். இரவு முழுவதும் மயங்கி கிடந்த நிலையில் மூளைச்சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது

சென்னை

சென்னை, தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மூத்த மகன் ஞான குமரன் ஐ.டி. நிறுவன ஊழியர். இளைய மகன் கார்த்திகேயன் (வயது 25). பி.சி.ஏ பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்கு கார்த்திகேயன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவர் மகாலட்சுமி நகர் சிட்லபாக்கம் சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. கார்த்திகேயன் விபத்து குறித்து தனது மாமாவுக்கு போன் செய்து தெரிவித்த நிலையில் மயக்கமடைந்தார். கார்த்திகேயன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது.

மயக்கத்தில் இருந்த கார்த்திகேயனுக்கு உதவாமல் கொடூர மனம் படைத்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கிய கார்த்திகேயனின் செல்போனை திருடி சென்றார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் பெற்றோர்கள், உறவினர்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிகாலையில் கார்த்திகேயன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்த அந்த பகுதி கடைகாரர் சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் மூளைச்சாவு அடைந்தார். ஆசையாக வளர்த்த செல்ல மகன் மூளை சாவு அடைந்ததை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட கார்த்திகேயன் உடலுக்கு ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரிடம் மனித நேயமின்றி செல்போ


Next Story