மஜித்கொல்லஅள்ளி மலையில் தூக்கிவச்சான் கல் கண்டுபிடிப்பு


மஜித்கொல்லஅள்ளி மலையில்  தூக்கிவச்சான் கல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 July 2023 7:30 PM GMT (Updated: 9 July 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஐகுந்தம் அருகே மயிலாடும்பாறையை சுற்றிலும் பல்வேறு தொல்லியல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் ஐகுந்தம் மஜித்கொல்லஅள்ளியில் உள்ள மலை மீது ஒரு கல் வித்தியாசமாக உள்ளதாக வரலாற்று குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதாம் உள்ளிட்டோர் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், மஜித்கொல்லஅள்ளி மலையில் பெருங்கற்காலத்துக்கு முன்னர் உள்ள நினைவு சின்னங்களில் ஒன்றான தூக்கிவச்சான் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல் 7 அடி நீளமும், 4 அடி அகலமும், 4 அடி உயரம் கொண்டதாகும். அடியில் 3 கற்கள் கொண்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கால மக்கள் தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரியும் வகையில் தான் இந்த கற்களை நிறுத்தினர். இது இப்பகுதியில் கண்டறியப்பட்ட 3-வது தூக்கிவச்சான் கல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால், பல தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கும் என்றார்.


Next Story