விஜயநகர கால நடுகற்கள், கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு


விஜயநகர கால நடுகற்கள், கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு
x

காவேரிப்பட்டணம் அருகேவிஜயநகர கால நடுகற்கள், கற்கால கருவிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணம் அருகே பெரமன்கொட்டாய் பகுதியில் மாந்தோப்பில் விஜயநகர காலத்து நடுகற்கள், 2 புதிய கற்கால கருவிகள் உள்ளன. இந்த பகுதியில் கள ஆய்வு செய்த தர்மபுரி அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் சந்திரசேகர், ஆய்வு மாணவர்கள் சபரி, பெரியசாமி, ஆனந்தன் ஆகியோர் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில், பெரமன் கொட்டாயில் உள்ள மாந்தோப்பில் பழைய கோவில் ஒன்று உள்ளது. கோவிலின் உட்பகுதியில் புதிய கற்கால கருவிகள் உள்ளன. கோவில் கருவறையில் 2 நடுகற்கள் உள்ளன. இவை விஜய நகர காலத்தை சேர்ந்தவை ஆகும். முதல் நடுக்கல்லில் ஒரு ஆண் உருவம் தோளில் சாட்டை போட்டவாறு காணப்படுகிறது. தலை கொண்டை அணிந்து, அணிகலன்கள் அணிந்தவாறு உள்ளன. அதன் அருகில் பெண் ஒரு கையில் பாத்திரம் ஏந்தியவாறும், மறு கையில் சேலையை பிடித்தவாறும் காட்டப்பட்டுள்ளது. அருகில் மற்றொரு நடுகல் உள்ளது. இதில் வீரன் ஈட்டியால் குத்துவதை போல உள்ளது. இவை புதிய கற்கால வாழ்விடமாக இருக்கலாம் என்றார்.


Next Story