அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் - கொலையை தடுக்க தவறியதால் நடவடிக்கை


அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் - கொலையை தடுக்க தவறியதால் நடவடிக்கை
x

அண்ணா சதுக்கத்தில் கொலையை தடுக்க தவறியதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்த ராஜா என்ற ஆட்டோ ராஜாவை, ஜாம் பஜார் பாரதி சாலையில் கடந்த 16-ந்தேதியன்று கும்பல் வெட்டி சாய்த்தது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா, தேவா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

ராஜா மற்றும் சூர்யா தரப்புக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் சூர்யா, ராஜாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி வந்தது அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும் அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், அந்த கொலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறியது, போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொலையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் ஸ்டாலினை பணியிடை நீக்கம் செய்து கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.


Next Story