பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றம்


பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றம்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:45 AM IST (Updated: 21 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.

மயிலாடுதுறை

சீர்காழி:-

சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.

பொதுமக்களுக்கு இடையூறு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, மாரிமுத்து நகர், வ.உ.சி. தெற்கு தெரு, திட்டை ரோடு, வி.என்.பி. நகர், சங்கர் நகர், டி.பி. ரோடு, அகரதிருக்கோவிலக்கா, திருக்கோலக்கா, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரோடு, ஈசானிய தெரு, கீழ தென்பாதி, இரணிய நகர், மேல மாரியம்மன் கோவில் தெரு, கீழ மாரியம்மன் கோவில் தெரு, கோவிந்தராஜர் நகர், புளிச்சக்காடு, சிதம்பரம் ரோடு, தாடாளன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்துவிடும் பன்றிகள் உணவு பொருட்களை தின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

பன்றிகள் பிடித்து அகற்றம்

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் பாபு ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story