தகுதி நீக்கம் எதிரொலி: காங்கிரசின் சமூக வலைதளப் பக்கத்தில் 'அஞ்சாதே' வாசகத்துடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்


தகுதி நீக்கம் எதிரொலி: காங்கிரசின் சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சாதே வாசகத்துடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்
x

ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கங்களிலும் இந்த முகப்புப் படம் வைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்திலும், 'அஞ்சாதே' என்ற வாசகத்துடன் ராகுல் காந்தியின் புகைப்படம் முகப்புப் படமாக வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story