10ம் தேதி மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் - ஓபிஎஸ் அறிவிப்பு


10ம் தேதி மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் - ஓபிஎஸ் அறிவிப்பு
x

ஓபிஎஸ் தரப்பிலான மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 10ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் 10-04-2023 திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெறும்.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story