திருவள்ளூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
திருவள்ளூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் நடைபெற்றது. இதை தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story