மாவட்ட அளவிலான கபடி போட்டி


மாவட்ட அளவிலான கபடி போட்டி
x

தோகைமலை அருகே நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூர்

கபடி போட்டி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூர் அ. உடையாபட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவிலான கபடி போட்டி மேற்கு மாரியம்மன் கோவில் விளையாட்டு மைதானத்தில் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில், கரூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசு-கோப்பை வழங்கல்

இதில் ராக்கம்பட்டி இளஞ்சிட்டு கபடி அணிக்கு முதல் பரிசாக ரூ.7 ஆயிரத்து 23 மற்றும் கோப்பையும், கழுகூர் அ.உடையாபட்டி மிரட்டல் பாய்ஸ் கபடி அணிக்கு 2-வது பரிசாக ரூ.6 ஆயிரத்து 23 மற்றும் கோப்பையும், திருச்சி லவ்ஸ்டார் கபடி அணிக்கு 3-வது பரிசாக ரூ.4 ஆயிரத்து 23 மற்றும் கோப்பையும், செம்பாறை கல்லுப்பட்டி எஸ்.கே.எம் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணிக்கு 4-வது பரிசாக ரூ.3 ஆயிரத்து 23 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கால் இறுதியில் தோல்வி அடைந்த அணிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 23 ரொக்கப்பணம் மற்றும் சிறப்பு அணிகள், சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. கபடி போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர்.


Next Story