காஞ்சீபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை


காஞ்சீபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை
x

காஞ்சீபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

ஒருங்கிணைப்பு கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீ விபத்துக்களை தடுக்கும் பொருட்டு அரசின் உத்தரவின்படியும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்திற்காகவும் மாவட்டத்தில் உள்ள நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் வட்ட அளவிலான ஆய்வுக்குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இந்த கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீ விபத்தை தடுக்கும் நோக்கத்தில் பட்டாசுகளை கவனமாக கையாள்வது தொடர்பாகவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், பாதுகாப்பு குழுக்கள் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வெடிபொருள் துணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தீயணைப்பு அலுவலர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story