மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:45 PM GMT)

மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ராணுவ வீரர்

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி அருகே உள்ள வெம்பூர் காலனியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (வயது 24) என்ற ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம். வழக்கின் புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் சட்டத்தை மீறி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story