விழுப்புரத்தில் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி ஆலோசனைக்கூட்டம்


விழுப்புரத்தில்      தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம்

தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மத்திய மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாநில இணைச்செயலாளர் செ.புஷ்பராஜ் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது மற்றும் கருத்தரங்கம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில இணைச்செயலாளர் மருதூர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் தமின், ஆதிதிராவிடர் நலக்குழு அணி அமைப்பாளர் செல்வபிரேம், தலைவர் வேலுஜி, துணைத்தலைவர் இருசப்பன், துணை அமைப்பாளர் திராவிட மணி, சூப்பர் பழனி, ராஜிவ்காந்தி, ஓம் சிவசக்திவேல், தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story