தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

சோளிங்கரில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சோளிங்கரை அடுத்த வேலம் கிராமத்தில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றியக் குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினா். ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் சோளிங்கர் பஸ் நிலையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா நகர செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், என்ஜினீயர் என்.கணேசன், எம்.வேலு, நகர துணை செயலாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கும், அண்ணா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் நகர ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன்பேட்டையில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பெல்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். ஜெகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.






