தி.மு.க. மருத்துவ அணி துணை அமைப்பாளர் நியமனம்


தி.மு.க. மருத்துவ அணி துணை அமைப்பாளர் நியமனம்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி துணை அமைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி துணை அமைப்பாளராக திருவாலங்காடு ஐ.ஓ.பி. மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அருள்மாறனை தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் பரிந்துரையின் பெயரில் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளருக்கு குத்தாலம் வடக்கு ஒன்றிய பொருளாளர் வெடி பாண்டியன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வெடி பாலமுருகன், திருவாவடுதுறை செந்தமிழ்செல்வன், திருவாலங்காடு வர்த்தகர்கள் சங்க தலைவர் செந்தில் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள்,மாவட்ட மருத்துவ அணி தலைவர், துணைத் தலைவர், துணை அமைப்பாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story