தி.மு.க. கவுன்சிலர்- செயல் அலுவலர் இடையே வாக்குவாதம்


தி.மு.க. கவுன்சிலர்- செயல் அலுவலர் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:30 AM IST (Updated: 1 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோம்பை பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலருக்கும், செயல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனி

கோம்பை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் மோகன்ராம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆறுமுக நயினார், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

தாஜ் நிஷா (தி.மு.க.):- பேரூராட்சியில் வார்டுகளில் குப்பைகள் அள்ளுவதையும், சாக்கடை தூர்வாரப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கோடை காலம் தொடங்குவதால் குடிநீர் வினியோகம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தலைவர்:- கவுன்சிலரின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கராஜ் (தி.மு.க.):- கூட்டத்தில் தீர்மானங்கள் முழுமையாக வாசிக்கவில்லை. அதேபோல் செலவு கணக்கு விவரங்களும் முழுமையாக இல்லை. இதனை ஏன் வெளிப்படையாக வைப்பது இல்லை. இதில் என்ன பிரச்சினை உள்ளது. மேலும் குடிநீர் இணைப்புக்கு பொறுத்தாத மீட்டர்களுக்கு எதற்காக கூடுதல் பணம் வசூல் செய்யப்படுகிறது.

செயல் அலுவலர்:- இது கடந்த 8 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

தலைவர்:- கடந்த ஆட்சியின்போது நடைமுறையில் இருந்தது. இனி இதுபோன்று தவறுகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைத்தொடர்ந்து கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அப்போது கவுன்சிலருக்கும், செயல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story