தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
x

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. தி.மு.க. தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாத்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தி.மு.க. தலைவரும் ,முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.



Next Story