தி.மு.க. நகர செயலாளர் எம்.எஸ். அக்பர்அலி காலமானார்
தி.மு.க. நகர செயலாளர் எம்.எஸ். அக்பர்அலி காலமானார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தி.மு.க. நகர செயலாளரும், எம்.எஸ்.ஏ. நிறுவனங்களின் உரிமையாளருமான எம்.எஸ். அக்பர் அலி நேற்று அதிகாலை காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அன்னவாசல் பள்ளிவாசல் மையவாடியில் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அனைத்துகட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த அக்பர் அலிக்கு மதினா பேகம் என்ற மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மதினா பேகம் அன்னவாசல் பேரூராட்சி 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story