தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: ஐகோர்ட்டில் தி.மு.க. மனு

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: ஐகோர்ட்டில் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 13 April 2024 5:05 AM GMT (Updated: 13 April 2024 5:12 AM GMT)

தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணைய விதிப்படி முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

சென்னை,

தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்து இருப்பதாவது; "தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதன் அடிப்படையில் அனுமதி கேட்டு அளிக்கக்கூடிய விண்ணப்பங்களை 2 நாட்களுக்குள் பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, அந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறது. சில விளம்பரங்கள், சாதாரண காரணங்களால் நிராகரிக்கப்படுகிறது. தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது.

எனவே தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கான விண்ணப்பத்தை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை (15-ந்தேதி) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரனைக்கு வரவுள்ளது.

Next Story