நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர் . தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் என்பது , குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story