நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


நீட் தேர்விற்கு எதிராக  தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x

நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கரூர்

உண்ணாவிரதம்

நீட் தேர்விற்கு எதிராகவும்,பா.ஜ.க. அரசை கண்டித்தும் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்.

பங்கேற்றவர்கள்

இதில், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திவேல், பகுதி கழக செயலாளர்கள் கனகராஜ், கோல்ட் ஸ்பாட் ராஜா, அன்பரசன், சுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய உண்ணாவிரதம் மாலையில் முடிவடைந்தது.

1 More update

Next Story