திமுக அரசு ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி


திமுக அரசு ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 18 Sept 2023 7:37 PM IST (Updated: 18 Sept 2023 10:03 PM IST)
t-max-icont-min-icon

திமுக அரசு ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நாமக்கல்லில் "சவர்மா" சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 17 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் இத்தகைய மரணங்களை பார்க்கும்போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு முற்றிலும் தோல்வியுற்றுள்ளதை உணர முடிகிறது.

மனித உயிர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதுடன், பொதுமக்களின் அடிப்படை தேவையான சுகாதாரத்தை காக்கத் தவறிய இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான தனது தார்மீக உரிமையை இழந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story