திமுக அரசு இந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகிறது - எச். ராஜா


திமுக அரசு இந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகிறது -  எச். ராஜா
x

திமுக அரசு மதவெறி கொண்ட தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து திட்டமிட்டு இந்து மதத்தை இழிவு படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனியார் மண்டப திறப்பு விழாவில் எச்.ராஜா கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில்,

திமுக இந்து விரோத கட்சி மட்டுமல்ல, தேச விரோத கட்சியும் கூட. ஈ.வே.ரா பற்றி பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்ததை கண்டிக்கின்றேன். அவரை கைது செய்த தமிழக அரசு நடராஜ பெருமாளை அவதூறாக பேசிய யூடியூப் மைனர் விஜய் ஏன் கைது செய்யவில்லை.

தமிழக போலீசார் திமுக அறிவாலயத்தின் அடிமைகளாக மாறிப் போய் உள்ளார்கள். வெளிநாடுகளில் இரண்டு கம்பெனிகளை திவாலாக்கிவிட்டு இங்கு வந்தவர் தான் தற்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்,. தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார்.

மின் துறையில் வேலை ஆட்களை காலி செய்து விட்டு மின் கணக்கீட்டுக்கு ஒப்பற்றக்காரர்களை பயன்படுத்தி முறையாக மின் கணக்கீடு செய்யாமல் பொதுமக்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திமுக அரசு மதவெறி கொண்ட தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து திட்டமிட்டு இந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

இந்து மதத்தையும், பெண்களை இழிவு படுத்தி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக நியமிக்க அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அவர் தற்போது இந்து மதத்தை மிகவும் இழிவாக பேசி வருகிறார். லியோனியை தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். இதை செய்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகரீகமானவர் என மக்கள் கருதுவார்கள். இல்லை என்றால் முதலமைச்சர் சொல்லித்தான் இதெல்லாம் நடப்பதாக நினைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார் .


Next Story