மதுரையில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்


மதுரையில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
x

மதுரையில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

மதுரை

மேலூர்,

மேலூரில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் முகமதுயாசின் வரவேற்றார். சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாடு மற்றும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதன் மேலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் இளைஞரணி ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story