தி.மு.க. சுற்றுச் சூழல் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


தி.மு.க. சுற்றுச் சூழல் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
x

ராணிப்பேட்டையில் தி.மு.க. சுற்றுச் சூழல் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தியின் ஆலோசனைப்படியும், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில், கோடை வெயிலின் தாக்கத்தை போக்க, பொதுமக்களுக்காக தண்ணீர் மற்றும் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் நடைபெற்றது. தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், அம்மூர் செயலாளர் பெரியசாமி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர், வினோத், வேதா சீனிவாசன், பி.எல்.டி.சிவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தொன் போஸ்கோ, மற்றும் அப்துல்லா, குமார் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story