விழுப்புரத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை


விழுப்புரத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:17:20+05:30)

விழுப்புரத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தைி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் கே.கே.சாலை முத்துவேல் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் சூர்யா. தி.மு.க. பிரமுகரான இவர் கோலியனூர் பகுதியில் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். இதனிடையே நேற்று அதிகாலை அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தி.மு.க. கட்சிக்கொடி கட்டிய கார் கண்ணாடியை யாரோ மர்மநபர்கள் உடைத்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அக்கொடியை அவிழ்த்தும் தீ வைத்து எரித்துள்ளனர். இதையறிந்ததும் சென்னையில் இருந்து விரைந்து வந்த சூர்யா, தனது கார் சேதமடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவர், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், முன்விரோதம் காரணமாக காரின் கண்ணாடியை யாரேனும் உடைத்து சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story