தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி
x

நெல்லையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

தி.மு.க.வின் சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நெல்லை மத்திய மாவட்டத்தின் சார்பில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.

தி.மு.க.வின் சொத்து பட்டியலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, அது குறித்து அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும் என்றும், அண்ணாமலைக்கு அரோகரா என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு, தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story