சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அடுத்த மாதம் 2 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு


சென்னை ஐகோர்ட்டு  தீர்ப்பை எதிர்த்து அடுத்த மாதம் 2 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு
x

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது. இதனால் அமைச்சர் பொறுப்பும் தானாகவே பறிபோயுள்ளது.

மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அடுத்த மாதம் ( ஜனவரி) 2 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனைக்கு பிறகு அடுத்த மாதம் 2 ஆம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளார்.


Next Story