திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 75-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 75-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்துக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் சாயி ஜெய்காந்த் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story