தி.மு.க. தெருமுனை பிரசாரம்


தி.மு.க. தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)

பரிகம் கிராமத்தில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்:

கள்ளக்குறிச்சி ஒன்றியம் பரிகம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் அகிலாபானுஅருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி அமைப்பாளர் அருள் வரவேற்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன், ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மாதவச்சேரி வெங்கடேசன், பரிகம் கிளை செயலாளர்கள் தாகப்பிள்ளை, ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story