தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் காந்தி திடலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியன், எத்திராஜ், ராஜன், பொருளாளர் சத்ய நாராயணன், மாநில வர்த்தக பிரிவு துணைத்தலைவர் ஜின்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரலேகா பிரபாகரன் வரவேற்றார். .சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் மகளிர் அணி மாவட்ட தலைவி அருளரசி, மாவட்ட துணைத்தலைவர் கோகுல், மூர்த்தி, விநாயகம், முத்துலட்சுமி, ஒ.பி.சி அணி மாவட்ட தலைவர் தெய்வ சிகாமணி, மயிலம் மண்டல தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் சந்திரலேகா விஜயன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.

1 More update

Next Story