குன்னூர் பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. நிவாரண உதவி


குன்னூர் பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. நிவாரண உதவி
x

குன்னூர் பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்று, ஊர் திரும்பிய போது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 8 பேர் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வழங்கினார்.

இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் 8 பேரின் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட தி.மு.க. சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவித்தொகையாக வழங்கினார். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story