நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது..! உறங்காது..! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது..! உறங்காது..! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 20 Aug 2023 11:19 AM IST (Updated: 20 Aug 2023 11:53 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக கூட ஆதரித்தது.

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னர் அல்ல; ஜனாதிபதி தான். மசோதாவை வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் கவர்னர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது.. உறங்காது.. அறப்போராட்டம் தொடரும். நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.என்று கூறினார்.



Next Story