நெல்லை மாநகராட்சி மேயரிடம் தி.மு.க.வினர் மனு


நெல்லை மாநகராட்சி மேயரிடம் தி.மு.க.வினர் மனு
x

நெல்லை மாநகராட்சி மேயரிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள், மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோரிட கோரிக்கை மனு வழங்கினர். அதில், ''தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட கருணாநிதி நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதிக்கு நெல்லை மாநகரின் மையப்பகுதியில் சிலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை அமைத்து நீண்ட நாட்கள் ஆவதால் சிதிலமடைந்துள்ளது. எனவே அங்கு அண்ணாவின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். அருகில் கருணாநிதி முழுஉருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி தர வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

அப்போது தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணிதுரை, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story