விமான நிலையம் அருகில் புகை வரும் பொருட்களை கொளுத்த வேண்டாம் - விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தல்


விமான நிலையம் அருகில் புகை வரும் பொருட்களை கொளுத்த வேண்டாம் - விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தல்
x

போகி அன்று விமான நிலையம் அருகில் புகை வரும் பொருட்களை கொளுத்த வேண்டாம் என்று விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதன் முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன.

இதுபோன்ற நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் அடர்ந்த புகை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் கால தாமதம் ஏற்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் போகி அன்று விமான நிலையம் அருகில் புகை வரும் பொருட்களை கொளுத்த வேண்டாம் என்று மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story