சேலம் மத்திய சிறைக்கு புத்தகங்களை இலவசமாக தாருங்கள்


சேலம் மத்திய சிறைக்கு புத்தகங்களை இலவசமாக தாருங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2023 7:30 PM GMT (Updated: 2023-02-10T01:00:28+05:30)
சேலம்

சேலம் மத்திய சிறையில் கைதிகள் படிப்பதற்காக நூலகம் உள்ளது. இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் இலவசமாக பெறுவதற்காக அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள கலையரங்கில் 'புத்தகம் தானம் செய்வீர்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்கினார்.

புத்தகங்களை பெற்று கொண்ட பின்னர் சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் பேசுகையில், சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் என 1,100 பேர் உள்ளனர். கைதிகள் வசதிக்காக சேலம் சிறை வளாகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் உள்ள புத்தகங்களை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறைக்கு எடுத்து சென்று படித்து விட்டு மீண்டும் நூலகத்தில் வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் தற்போது 1,500 புத்தகங்கள் உள்ளன. மேலும் புத்தகங்கள் இலவசமாக பெறுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நூலகத்தில் உள்ள புத்தகங்கள் படித்து, அதில் சொல்லப்பட்டு உள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ளும் போது குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணங்கள் கைதிகளுக்கு தோன்றும்.

எனவே கைதிகள் நலனுக்காக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இலவசமாக புத்தங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story