புதிய ஆள் தேர்வு வாரியம் தேவையில்லை - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


புதிய ஆள் தேர்வு வாரியம் தேவையில்லை - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

தமிழ்நாடு அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆணையம் அனைத்து வகையான ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பிரிப்பதற்காக தமிழக அரசு வகுத்துள்ள திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு முழுவதும் 500-க்கும் குறைவானோரை மட்டுமே தேர்ந்தெடுக்கும். மீதமுள்ள 3 ஆயிரம் பணிகள், குரூப்-4 பணிகளுக்கு 4 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவதாக இருந்தால், அவற்றையும் சேர்த்து மொத்தம் 7 ஆயிரம் பணிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள தேர்வு வாரியம் தான் ஆட்களைத் தேர்வு செய்யும்.

தமிழ்நாடு அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆணையம் அனைத்து வகையான ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்; புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story