சாமி படமோ, சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது - மருத்துவக் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையால் பரபரப்பு


சாமி படமோ, சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது - மருத்துவக் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 11:50 PM IST (Updated: 18 Oct 2023 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரின் சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

ஆயுத பூஜை அன்று பூஜை செய்யும் நிகழ்வுகளில் எந்த மதத்தை சார்ந்த சாமி படமோ, சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது என்று திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆயுத பூஜை, விஜயதசமி அன்று பூஜை செய்யும் நிகழ்வுகளில் எந்த மதத்தை சார்ந்த சாமி படமோ அல்லது சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏதேனும் வைத்திருந்தால் அதனை எதிர்கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ள அவர், மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்றறிக்கையை வெளியிடுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story