பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா தொற்று


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா தொற்று
x

கோப்புப்படம்

டாக்டர் ராமதாசுக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது.

நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story