'நீட்' தேர்வை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

‘நீட்’ தேர்வை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் 'நீட்' தேர்வை கண்டித்து கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ், செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, மாநில சட்டத்துறை இணைசெயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டு 'நீட்' தேர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story