குடிநீர் டேங்க் ஆபரேட்டர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் டேங்க் ஆபரேட்டர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 12:18 AM IST (Updated: 1 July 2023 12:20 PM IST)
t-max-icont-min-icon

நெமிலியில் குடிநீர் டேங்க் ஆபரேட்டர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

நெமிலியை அடுத்த ஏலத்தூர் கிராமத்தை ேசர்ந்தவர் மணி (வயது 46). இவர் அதே கிராமத்தில் குடிநீர் டேங்க் ஆபரேட்டராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் இவருக்கும் தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஊராட்சி மன்ற தலைவர் சோபனாவின் கணவர் வினோத்குமார் முன்விரோதத்தின் காரணமாக மணியை தொடர்ந்து பணி செய்யவிடாமல் இடையூறு செய்து வருவதாகவும், கடந்த 5 மாதத்திற்கு முன்பு குடிநீர் டேங்கின் சாவியை வாங்கிக்கொண்டு இதுவரை தரவில்லையென்றும், 6 மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 10 முறைக்கு மேல் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் டேங்க் ஆபரேட்டர் மணி தன்னுடைய குடும்பத்தினருடன் மீண்டும் பணி வழங்கக்கோரியும், ஊராட்சி மன்றதலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story