புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்று பேசினார்.
தேவகோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கி போதைப்பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏறபடுத்தினார். இப்பள்ளி உதவி தலைமையாசிரியை விமலா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி முதல்-அமைச்சர் பேசிய வீடியோ காண்பிக்கப்பட்டது. முடிவில் மாணவ, மாணவிகள் அனைவரும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். இதில் போலீஸ் செந்தில், மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story