போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்


போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
x
தினத்தந்தி 6 April 2024 6:50 AM GMT (Updated: 6 April 2024 11:38 AM GMT)

நீதிமன்ற உத்தரவுப்படி ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சோதனைக்கு பின்பு அவரது வீட்டிற்கு சீல் வைத்து சென்றனர்.

இந்த நிலையில், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது, ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பியதுடன், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு உள்ளது.


Next Story